ஆதார் சேவையை மக்களிடம் எளிமைபடுத்தும் நோக்கில், ஆதார் ஆணையம் (UIDAI) பொறியியல் மாணவர்களுக்கான ஆதார் ஹேக்கத்தான் 2021 போட்டியை நடத்துகிறது. இதில் வெற்றிபெறும் குழுவுக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த எண்ணாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் சேவை எளிமையாக்கும் நோக்கிலும், தனிநபர் தகவல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப சவால்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஹேக்கத்தான் ஒன்றை அறிவித்துள்ளது. அக்டோபர் 28 ஆம் தேதி, வியாழக்கிழமை முதல் அக்டோபர் 31 ஆம் தேதி இரவுக்குள், ஆதார் ஆணையம் கொடுத்துள்ள தலைப்பின் கீழான தங்களின் கண்டுபிடிப்புகளை போட்டியாளர்கள் சமர்பிக்க வேண்டும்.
அதாவது ஆதார் சேவையை எளிமைபடுத்ததுதல், பதிவு செய்தல், புதிய திருத்தங்களை மேற்கொள்ளுதல், எளிய மக்களும் டெக்னாலஜியை எளிமையாக அணுகி ஆதாருக்கு தீர்வு காண்பதற்கான வழி, தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தீர்வு உள்ளிட்ட கருப்பொருள்களை உள்ளடக்கிய வகையில் இந்த ஹேக்கத்தான் நடைபெறுகிறது. இதில், பொறியியல் கல்லுரிகளில் படிக்கும் மாணவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
அதற்காக இரண்டு தலைப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் தலைப்பு "பதிவு மற்றும் புதுப்பித்தல்" (Enrolment and Update). சாதாரண மக்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை ஆதாருக்கு பதிவு செய்யும்போது அல்லது புதுப்பிக்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு எளிமையாக தீர்வு காணும் வகையில் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். மக்களின் குறைகளுக்கு அல்லது சேவைகளை எளிதாக்குவதை நோக்கமாக வைத்து புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்.
ALSO READ | உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? ஆன்லைனில் எவ்வாறு மீட்டெடுக்கலாம்?
இரண்டாவது தலைப்பு, "அடையாளம் மற்றும் அங்கீகாரம்" (Identity and Authentication). எந்த தகவல்களையும் பகிராமல், மக்களின் தங்களின் அடையாளங்களை நிரூபிக்கும் வகையில், தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்வதென்றால், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதாக கண்டுபிடிப்பு இருக்க வேண்டும்.
இந்த கருப்பொருளை மையப்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுகளாக இதுவரை சுமார் 2,700-க்கும் மேற்பட்ட பதிவுகள் UIDAI -க்கு சென்றுள்ளது. இவற்றிலிருந்து சிறந்த கண்டுபிடிப்புகளை கொடுத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்;
* இந்த போட்டியில் பங்கேற்பதற்காக UIDAI தனி போர்ட்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஐஐடிகள், என்ஐடிகள், என்ஐஆர்எஃப் மற்றும் உயர்நிலைக் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை பொறியியல் நிறுவனங்களிலிருந்தும் மாணவர்கள் ஹேக்கத்தானில் பங்கேற்கலாம்.
• ஒரு குழுவில் அதிகபட்சம் 5 உறுப்பினர்கள் இருக்கலாம்.
• ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்கலாம்.
ALSO READ | Pan Aadhaar Linking : பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
• ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவில் உறுப்பினராக இருக்க முடியாது.
• அனைத்து குழு உறுப்பினர்களும் ஒரே பொறியியல் கல்லூரியில் இருந்து இருக்க வேண்டும்.
• பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய சரியான ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
• ஒவ்வொரு குழுவும் தங்கள் சேர்க்கையை உறுதிசெய்ய ஏதேனும் ஒரு தீம்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு பிரச்சனை அறிக்கையை தீர்க்க வேண்டும்.
* விருப்பமான மொழியில் கண்டுபிடிப்புகளை சமர்பிக்கலாம். அனைத்து தீர்வுகளும் அக்டோபர் 31 ஆம் தேதி இரவுக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.
ALSO READ | முகவரி சான்று இல்லாமலேயே இனி ஆதார் அட்டையில் ஈஸியா வீட்டு முகவரியை மாற்றலாம்..
பரிசு :
ஒவ்வொரு கருப்பொருளின் வெற்றியாளர்களுக்கும் பரிசுத் தொகை மற்றும் பிற பரிசுகளையும் UIDAI அறிவித்துள்ளது. முதல் பரிசு ரூ.300,000, இரண்டாம் பரிசு ரூ. 200,000, மூன்றாம் பரிசு ரூ. 100,000 (இரண்டு அணிகளுக்கு கொடுக்கப்படும்). இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஆதார் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்படும். இது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் வெற்றியாளர்கள் பெறுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.