ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் - மறுக்கும் ஆணையம்

news18
Updated: September 12, 2018, 2:02 PM IST
ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் - மறுக்கும் ஆணையம்
news18
Updated: September 12, 2018, 2:02 PM IST
பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் மென்பொருள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரை ஹேக்கிங் செய்ய பயன்படும் மென்பொருள்கள் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக 5 இணைய நிபுணர்கள் மூலம் மென்பொருளை ஆய்வு செய்து ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி  வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்


மேலும், ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்கச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மென்பொருள் மூலமாக யார் எங்கிருந்து வேண்டுமென்றாலும் ஆதார் தகவல்களை மாற்றவும் புதிதாக சேர்க்கவும் முடியும் என்று ஹஃபிங்டன் போஸ்ட் தன் செய்தியில் கூறியுள்ளது.

இந்தச் செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம்(UIDAI) தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், ஆதார் என்ரோல்மெண்ட்டை ஹேக் செய்ததாக கூறப்படும் செய்திகள் தவறானது என்றும், அடிப்படையில்லாத ஆதாரமற்ற செய்தி என்றும் கூறியுள்ளது.


First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்