கொரோனா பரவல்: யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைப்பு

கொரோனா பரவல்: யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைப்பு

மாதிரி படம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  முதுநிலை படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான யு.ஜி.சி. மற்றும் நெட் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு வருகிற மே மாதம் 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

  இதற்கிடையில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, இந்தத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

  இதனைத் தொடர்ந்து தேசிய டெஸ்டிங் ஏஜென்சி (NTA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யு.ஜி.சி., நெட் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், மாற்றுத் தேதி, தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read :  ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்களுக்கு இடையில் 2021-ல் மட்டும் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

   

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: