எங்கும் செல்லாதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் - மஹாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

தன்னார்வ அமைப்புகள் தாமே முன்வந்து இவர்களின் நலனில் பொறுப்பெடுத்துக் கொண்டால், அரசுக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எங்கும் செல்லாதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் - மஹாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர்.
  • Share this:
வெளிமாநிலத் தொழிலாளர்கள் எங்கும் செல்ல வேண்டாம். நாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம் என்று மஹாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ட்விட்டர் பதிவில், “சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் எனக்கு அழைத்து பேசினார்கள். ஆந்திரா, தெலங்கானா மட்டுமில்லாமல் இன்று உத்திரபிரதேசத்தின் முதலமைச்சர் கூட அழைத்து பேசினார்.    உத்தவ்ஜீ எங்கள் ஆட்களில் சிலர் உங்கள் மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வர விரும்புகிறார்கள். அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார்கள்.

''இது ஒரு உலகளாவிய நெருக்கடி, எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள், எங்கேயும் செல்ல முயற்சிக்காதீர்கள். நம்மிடையே இருக்கும் பிற மாநில தொழிலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசே ஏற்கிறது. தன்னார்வ அமைப்புகள் தாமே முன்வந்து இவர்களின் நலனில் பொறுப்பெடுத்துக் கொண்டால், அரசுக்கு பேருதவியாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading