Kerala | கேரளாவில் நீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!

Kerala | கேரளாவில் நீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!

விவி.பிரகாஷ்

பிரகாஷிற்கு நேற்றிரவு திடீரென அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

  • Share this:
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் மட்டும் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைவதால் நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கிளைமேக்ஸ் காட்சியான வாக்கு எண்ணிக்கை, மே 3ம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே நாட்டில் கொரோனாவின் 2வது அலை வீரியமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. தேர்தல் திருவிழா நடைபெற்ற முடிந்த பின்னர் வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வேட்பாளருமான விவி.பிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூர் சட்டமன்ற தொகுதியில் UDF கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மலப்புரம் மாவட்ட செயலாளர் வி.வி..பிரகாஷ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55. நேற்றிரவு திடீரென அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மரணம் அடைந்த விவி.பிரகாஷிற்கு ஸ்மித்தா என்ற மனைவியும், நந்தனா, நிலா என இரண்டு மகள்களும் உள்ளனர். விவி.பிரகாஷ் கடந்த 4 ஆண்டுகளாக மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார்.
மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

நீலாம்பூர் தொகுதியினை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சி மிக தீவிரமாக அங்கு களப்பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

விவி.பிரகாஷ் மறைவிற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், சகோதரனை இழந்துவிட்டதை போன்ற துயரம் ஏற்பட்டுள்ளது. நீலாம்பூரில் காங்கிரஸ் நல்ல வித்தியாசத்தில் வெற்றியை பெறும் என நம்பிக்கை உள்ளது. பெரிய அந்தஸ்தை பெறுவதற்கு முன்னரே அவர் காலமடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சக கட்சி நிர்வாகி என்பதையும் கடந்து விவி.பிரகாஷ் ஒரு சகோதரனை போன்றவர் என சென்னிதாலா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதித்தவருக்காக 1,300 கிமீ பயணித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வந்து உதவிய நண்பர்!

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 3 வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். அதே போல தமிழகத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: