• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாராஷ்டிரா அரசியல்! தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏகளைச் சந்தித்துப் பேசிய உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா அரசியல்! தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏகளைச் சந்தித்துப் பேசிய உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

  • News18
  • Last Updated :
  • Share this:
    மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கும் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைச் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், வெள்ளியன்று இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார்.

    அதனால், மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. தேவேந்திர பட்னவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், மும்பை ரினாய்ஸ்சன்ஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    அப்போது சரத்பவார், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுட் உடனிருந்தனர். அப்போது பேசிய அவர், ‘நீங்கள் கவலைப்படவேண்டாம். நம்முடைய உறவு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். நம்ம கூட்டணி நீண்ட நாள்களுக்கு இருக்கும்’ என்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: