Home /News /national /

துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரே

துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரே

Uddhav thackrey

Uddhav thackrey

நாங்கள் இந்துத்துவாவை கைவிட மாட்டோம். பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம் ஆனால் இந்துத்துவாவுடன் அல்ல - உத்தவ் தாக்கரே

    துரதிர்ஷ்டவசமாக நாங்கள் பாஜகவை 25 ஆண்டுகளாக வளர்த்து விட்டோம் என சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும், முதல்வர் வேட்பாளர் தொடர்பான விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து 25 ஆண்டுகளாக அங்கம் வகித்த பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த சிவசேனா, மாநிலத்தில் மூன்று கட்சி கூட்டணி ஆட்சியை நிறுவியது.

    அப்போதிலிருந்தே பாஜகவும், சிவசேனாவும் எதிரும் புதிருமாக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே உடல்நலக்குறைவால் நீண்டநாட்களாக உத்தவ் தாக்கரே பொதுவெளியில் வராமல் இருப்பதையும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.

    Also read:  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் - பிரதமர் மோடி!

    இந்த நிலையில் கடந்த நவம்பரில் முதுகுத்தண்டில் ஆபரேஷன் செய்து கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் பேசியிருக்கிறார். சிவசேனா நிறுவனர் பாலசாகேப் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி, கட்சியினரிடையே பேசிய உத்தவ் தாக்கரே, அரசியல் கூட்டணியால் 25 ஆண்டுகள் சிவசேனாவுக்கு வீணடிக்கப்பட்டது என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், “நாம் (சிவசேனா) 25 ஆண்டுகளை பாஜக கூட்டணியில் வீணடித்துவிட்டோம். நாம் ஏன் அவர்களை விட்டு ஒதுங்கினோம்? இன்று அவர்கள் காட்டுகின்ற வெற்று இந்துத்துவா என்பது அதிகாரத்திற்கான வேட்கையைத் தவிர வேறில்லை. 25 வருடங்களாக நாம் அவர்களை வளர்த்தெடுத்தோம் என்பது துரதிர்ஷ்டவசமானது. பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ கொள்கையை நம்பியது. “நாங்கள் இந்துத்துவாவை கைவிட மாட்டோம். பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம் ஆனால் இந்துத்துவாவுடன் அல்ல.

    Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!

    ஆங்கிலேயர்களைப் போல் அடிமைச் சூழலை உருவாக்குவது இந்துத்துவம் அல்ல. உண்மையான இந்துக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் உட்கார்ந்து விட்டால், அடிமைத்தனம் மீண்டும் வரும் என்பதுதான் நிலைமை. எமர்ஜென்சிக்கு எதிராக இருந்தவர்கள் நாட்டில் எமர்ஜென்சி போன்ற சூழலை உருவாக்குகிறார்கள். இதை உடைக்க சிவ சைனியர்கள் முன்வர வேண்டும்.

    விரைவில் நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். காவியில் பலம் என்ன என்பதையும், என் உடல்நலம் குறித்தும் எதிர்கட்சிகளுக்கு உணர்த்துவேன். ஒரு காபந்து அரசாங்கம் இருப்பதைப் போல, அவர்கள் காபந்து எதிர்க்கட்சி, அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

     
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Uddhav Thackeray

    அடுத்த செய்தி