Home /News /national /

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியை விட்டு நீக்கினார் உத்தவ் தாக்ரே

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியை விட்டு நீக்கினார் உத்தவ் தாக்ரே

ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கிய உத்தவ் தாக்ரே

ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கிய உத்தவ் தாக்ரே

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை வரும் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் கூடுகிறது.

    மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்ரே, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக துணை சபாநாயகரை வைத்து தகுதி நீக்க நடவடிக்கையை உத்தவ் அரசு மேற்கொண்டது. இதற்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

    அத்துடன் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அவர்கள் கொண்டு வந்தனர். இதையடுத்து நெருக்கடி முற்றியதால் தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். தொடர்ந்து எதிர்பாராத திருப்பமாக பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி வைத்துள்ள பாஜக, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்சை துணை முதலமைச்சராக ஆக்கியது.

    இதையும் படிங்க: ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

    இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாாவில் இருந்து வெளியேற்றியுள்ளார் உத்தவ் தாக்ரே. இந்த பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை வரும் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் கூடுகிறது. ஜூலை 4ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஒரு தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 287 இடங்களில், பாஜக மற்றும் கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களும், ஷிண்டேவிற்கு ஆதரவாக சிவசேனா எம்எல்ஏக்கள் 39 பேரும் , சுயேச்சை எம்எல்ஏகள் 10 பேரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Maharashtra, Shiv Sena, Uddhav Thackeray

    அடுத்த செய்தி