மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!
உத்தவ் தாக்கரே
  • News18
  • Last Updated: November 28, 2019, 7:11 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா மாநிலத்தின் 19-வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் பகத் சிக் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்துள்ளன. பல குளறுபடிகளுக்கு மத்தியில் மும்பையிலுள்ள சிவாஜி பூங்கா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது.

இன்று மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து, ‘சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் முண்டே மற்றும் சுபாஷ் தேசாய் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் ராஜாராம் பாடில், சாஹன் சந்திரகாந்த் புஜ்பாலும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாகேப் த்ரோட், நிதின் ராவுட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Also see:

 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்