அரசியலில் ஆர்வமற்றவரை கட்சிக்குள் திணித்த தந்தை...! யார் இந்த உத்தவ் தாக்கரே...?

Uddhav Thackeray History |

அரசியலில் ஆர்வமற்றவரை கட்சிக்குள் திணித்த தந்தை...! யார் இந்த உத்தவ் தாக்கரே...?
உத்தவ் தாக்கரே
  • News18
  • Last Updated: November 29, 2019, 9:06 AM IST
  • Share this:
மகாராஷ்டிர முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்கரே தொடக்கத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்து, தனது தந்தையால் கட்சியின் உள்ளே திணிக்கப்பட்டவர்தான்.

மராட்டியர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா என்ற முழக்கத்துடன் 1966- ஆம் ஆண்டு பால்தாக்கரே-வால் தொடங்கப்பட்டது சிவசேனா.

மும்பையில் மார்மிக் எனும் மராத்திய வார இதழை நடத்திய பால்தாக்கரே, குஜராத்தியர்கள், பீகாரிகள் மற்றும் தென்னிந்தியர்களால் மராத்திய மக்களின் வளம் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சியினர், 'வந்தேறி'களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள் மீதும் பல சமயங்களில் தாக்குதல் நடத்தி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.


இந்நிலையில், 1968-ம் ஆண்டில் மும்பையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், 42 இடங்களில் வென்று அரசியலில் அடித்தளமிட்டது சிவசேனா. அதன் தலைவர் பால் தாக்கரேயின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர் அவரது சகோதரர் மகன் ராஜ்தாக்கரே. அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, ஒரு கட்டத்தில் சிவசேனா கட்சிக்குள் திணிக்கப்பட்டார். உத்தவ் கட்சிக்குள் வந்த பிறகு, பால்தாக்கரேயிடமிருந்து விலகி நவநிர்மான் சேனா என்ற கட்சியை தொடங்கினார் ராஜ்தாக்கரே

2002-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றியது. இதற்கு காரணகார்த்தா உத்தவ் தாக்கரே என கூறிய பால் தாக்ரே, அவரை செயல் தலைவராக அறிவித்தார்.

வன உயிரின புகைப்படக்காரரான உத்தவ் தாக்கரேவுக்கு அரசியலில் ஆர்வமில்லாத போதும், தானாக தேடி வந்தது தான் செயல் தலைவர் பதவி. இதற்கு பின்னர் 2006- ம் ஆண்டு சிவசேனா உத்தவ் தாக்ரேவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2013- ம் ஆண்டில் பால்தாக்கரே காலமான பின் கட்சியின் தலைமை பொறுப்பை உத்தவ் தாக்கரே ஏற்றார்உத்தவ் தாக்கரே தலைவராக பொறுப்பேற்றபின், சிவசேனாவின் முகம் சற்றே மாறியது. தன் தந்தை பால் தாக்கரே மற்றும் சகோதரர் ராஜ் தாக்கரே போல் அடிதடி அரசியல் செய்யாமல், நிதானத்துடனேயே தனது பயணத்தை தொடர்ந்தார்.

பிராந்தியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வதைத் தவிர்த்து, முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என்ற சிவசேனாவின் முழக்கமும் மெல்ல மறைந்தது.

2012-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விதர்பா விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தது ஆகியவை உத்தவ் தாக்கரேவின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது.

பாஜக-வுடனான 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டு 2014-ம் ஆண்டு சிவசேனா தனித்து நின்று போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து ஆட்சி அமைத்தன. 2019- ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இரு கட்சிகளும் பிரிந்தன.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதலமைச்சர் என உறுதி பட கூறி வந்தார் உத்தவ் தாக்கரே, தற்போது இது நிறைவேறியுள்ள நிலையில், அவரது தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்