முகப்பு /செய்தி /இந்தியா / அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சிவசேனா அணிக்கு தீப்பந்தம் சின்னம் ; உதயசூரியன் சின்னம் வழங்க மறுப்பு..!

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சிவசேனா அணிக்கு தீப்பந்தம் சின்னம் ; உதயசூரியன் சின்னம் வழங்க மறுப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

உதயசூரியன் மற்றும் திரிசூலம் ஆகியவை ஏற்கனவே கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு உதயசூரியன் சின்னம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. 

மஹாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தியாளர்கள் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். அந்தேரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலான சிவசேனா அணியில் இருந்து முர்ஜி படேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் மறைந்த ரமேஷ் லாத்கேவின் மனைவி ருத்துஜா லாத்கேவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில்-அம்பு சின்னத்தை பயன்படுத்த இருதரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதையும் படிங்க | பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மனு.. ’இதுதான் நீதிமன்றத்தின் வேலையா’ என சாடிய உச்சநீதிமன்றம்

மேலும், புதிய பெயர் மற்றும் சின்னத்தை பரிந்துரைக்க அறிவுறுத்தியது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன்படி உதய சூரியன், திரிசூலம் மற்றும் தீப்பந்தம் ஆகிய சின்னங்களில் ஒன்றை வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பரிந்துரைத்தார்.

top videos

    இந்நிலையில், அவரது அணிக்கு 'சிவசேனா உத்தவ் பாலாசாகெப் தாக்ரே என்ற பெயரையும் தீப்பந்தம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உதயசூரியன் மற்றும் திரிசூலம் ஆகியவை ஏற்கனவே கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Shiv Sena, Uddhav Thackeray