கோயில்களைத் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - பா.ஜ.கவினரைச் சாடிய உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

கோயில்களைத் திறக்கச் சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மகாராஷ்டிராவில் கோயில் திறக்க மாநில அரசு அனுமதிக்காகதைக் கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

  இந்தநிலையில், கோயில்களைத் திறக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ‘கோயில்கள் மற்றும் பிற இடங்களைத் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் போராட விரும்பினால் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்.

  சில இடங்களைத் திறக்க வேண்டும் என்று சில மக்கள் அவசரப்படுகிறார்கள். இன்னும் கொஞ்சம் காலம் காத்திருங்கள் என்று அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், தற்போது அதனை திறக்க வேண்டாம். பின்னர், கொரோனா அதிகரித்தால் மீண்டும் அதனை மூட வேண்டியிருக்கும்.

  கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. நாம் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். இப்போது திறக்கப்பட்டுள்ள இடங்களை மீண்டும் மூட வேண்டிய அவசியம் இல்லை. எதிரியை முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்று மக்களுக்கு கண்டிப்பாக தெரியவேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலும் இந்த அதிகமாகிவருகிறது. ஆனால், இந்தமுறை அந்த அறிகுறிகள் வேறுவிதமாக உள்ளது. அதனால், அந்த நோயாளிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  Published by:Karthick S
  First published: