• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டிசம்பர் 1-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார் உத்தவ் தாக்கரே!

டிசம்பர் 1-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார் உத்தவ் தாக்கரே!

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமனதாக உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திடனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என்று அக்கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


    மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருந்த தேவேந்திர பட்னவிஸ் இன்று மாலையில் ராஜினாமா செய்தார். அதனையடுத்து, இன்று மாலையில் மும்பையிலுள்ள ஹோட்டல் ட்ரைடென்டில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடினர். அவர்களது கூட்டணிக்கு மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அந்தக் கூட்டணியை முதல்வராக பொறுப்பேற்று உத்தவ் தாக்கரே தலைமையேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஜெயந்த் பாட்டில் முன்மொழிந்தார். அதனை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் தலைவர் பாலாசாகேப் வழிமொழிந்தார். அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமனதாக உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திடனர்.

    எம்.எல்.ஏக்களின் ஒப்புதலைக் கொண்டு, உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமைகோருவார். அதனடிப்படையில் மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி ஆட்சியமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்புவிடுப்பார். டிசம்பர் 1-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பா.ஜ.கவைச் சேர்ந்த காளிதாஸ் கோலம்கர் இடைக்கால சபாநாயகர் பதவியேற்றுள்ளார். அவர் முன்னிலையில் நாளை அனைத்து எம்.எல்.ஏக்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்கவுள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: