ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆட்டோ, டாக்ஸிகளுக்கு தடை...

பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆட்டோ, டாக்ஸிகளுக்கு தடை...

பெங்களூரூவில் ஓலா, யூபர் சேவைகளுக்கு 3 நாள் தடை

பெங்களூரூவில் ஓலா, யூபர் சேவைகளுக்கு 3 நாள் தடை

ஓலா,ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக தங்களுக்கு என பிரத்தியேக செயலியை உருவாக்க பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் புக்கிங் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடகா போக்குவரத்துத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து ஆணையர் டிஎச்எம் குமார் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாள்களாகவே இந்த நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். டாக்ஸி சேவை அளிக்கும் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. எனவே, சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.

  பொதுவாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 வரையில் வசூலிக்கப்படும் நிலையில், பெங்களூருவில் ஒன்று, இரண்டு கிமீ தூரத்திற்கு எல்லாம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வாடிக்கையாளர்கள் புகார்களை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: மது அருந்தி பேருந்தை இயக்கினால் டிஸ்மிஸ்... ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

  இந்நிலையில், ஓலா, ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக தங்களுக்கு என பிரத்தியேக செயலியை உருவாக்க பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆதார் திட்டத்தின் மூளையாக திகழும் நந்தன் நீலகென்னி நடத்தும் நிறுவனத்தின் துணையுடன் Namma Yatri App என்ற செயலிலை நவம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. நாட்டின் நகரங்களில் முக்கிய அங்கமாக மாறிப்போன இந்த ஓலா, யூபர் செயலிகளுக்கு பெங்களூரு போன்ற முன்னணி நகரத்திலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bangalore, Bengaluru, Ola Cabs, Uber