இந்திய குடிமக்களுக்கான விசா : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிரடி அறிவிப்பு

காட்சி படம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய குடிமக்களுக்கான விசா-ஆன்-வருகை வசதியை நிறுத்தி வைத்துள்ளது.

  • Share this:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்தியாவில் இருந்து பயணிக்கும் அல்லது கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கான விசா-ஆன்-வருகை வசதியை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் நாடுகளால் வழங்கப்பட்ட விசா அல்லது ரெசிடண்ட் பெர்மிட் பெற்றவர்கள் கூட விசா-ஆன்-வருகை வசதியை அணுக முடியாது என்றும் ஐக்கிய அரபு எமிராட்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த திங்களன்று (23ம் தேதி) ஒரு ட்விட்டர் யூசரின் கேள்விக்கு பதிலளித்த எடிஹாட் ஏர்வேஸ் தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அவர்களின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “கடந்த 14 நாட்களில் இந்தியாவில் இருக்கும் அல்லது இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா-ஆன்-வருகை வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் எங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த வேலை செய்து வருகிறோம்.

மேலும் தகவல்களுக்கு எங்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்தை பார்வையிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் நமீபியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் UAE தெரிவித்துள்ளது. முன்னதாக, விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பயண கட்டுப்பாடுகள் மற்றும் பயண ஆலோசனையைப் புதுப்பித்து வெளியிட்டிருந்தது.

Also read : எஸ்பிஐ பேங்கில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

அதில், அமெரிக்க விசா, கிரீன் கார்டுகள், இங்கிலாந்து குடியிருப்பு அனுமதி அல்லது ஐரோப்பிய ஒன்றிய (ஐரோப்பிய யூனியன்) குடியுரிமை அனுமதியுடன் வழக்கமான பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவுடன் நுழைவு விசாக்களைப் பெறுவார்கள் என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த விசா 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் அதே 14 நாட்கள் காலத்திற்கு ஒரு முறை மட்டுமே நீட்டிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. இந்திய பாஸ்போர்ட், அமெரிக்க விசா, கிரீன் கார்டு, இங்கிலாந்து குடியுரிமை அனுமதி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை ஆகியவை குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக, கொரோனா நெகட்டிவ் பெற்ற ஆர்டி-பிசிஆர் அறிக்கையை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரித்து வருவதாலும், இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவை சிவப்பு நிறத்தில் இருந்து அம்பர் பட்டியலுக்கு மாற்றியுள்ளது.

இங்கிலாந்தில் பயணப் பட்டியல்களில் கொரோனா பாதித்த நாடுகள் சிவப்பு, அம்பர் மற்றும் பச்சை என பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து அவை பட்டியலிடப்படுகின்றன. அதன்படி, முதலில் இந்தியா ரெட் நிற பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இந்தியாவின் தொற்றுநோய் நிலையை "நிலை 2: மிதமானது" என்று பட்டியலிட்ட பிறகு அமெரிக்காவும் கடந்த வாரம் இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: