பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய விமானிகளுக்கு உதவ இருக்கும் ஐக்கிய அமீரக விமானப்படை!

ரஃபேல் விமானம்

கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தபோது பிரான்ஸ் விமானப்படையின் MRTT விமானம் 4 முறை எரிபொருள் நிரப்பியது

  • Share this:
இந்திய - ஐக்கிய அமீரக உறவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முன்னெடுப்புகளுடன், பிரான்ஸையும் இதில் இணைத்து முத்தரப்பு ராணுவ பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவு புதிய பரிமாணம் பெற்றிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் முந்தைய காலகட்டத்தை விட இந்தியாவுடனான அரபு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் மாதத்தில் பிரான்சில் இருந்து இந்தியாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்படவிருக்கும் ரஃபேல் விமானங்களுக்கு நடு வானில் எரிவாயு நிரப்பும் பணியை ஐக்கிய அமீரக விமானப்படையினர் மேற்கொள்வர் என தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஃபிரான்சின் Bordeaux-Merignac விமானப்படைதளத்தில் இருந்து அம்பாலாவிற்கு 8 மணிநேரம் நில்லாமல் வரவிருக்கும் 3 ரஃபேல் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Airbus டேங்கர் விமானம் மூலம் இரண்டு முறை எரிவாயு நிரப்பப்படும் என தெரியவந்துள்ளது.

ரஃபேல் விமானம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முதல் முறை நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளும் எவ்வாறு தங்கள் பாதுகாப்பு உறவுகளை விரைவாக உறுதிப்படுத்துகின்றன என்பதைப் பிரதிபலிக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, 5 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தபோது பிரான்ஸ் விமானப்படையின் MRTT விமானம் 4 முறை எரிபொருள் நிரப்பியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்தியா, ஐக்கிய அமீரகத்துடன் இணைந்து பிரான்ஸும் முத்தரப்பு ராணுவ பயிற்சியில் ஈடுபட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையானது ஜனவரி 6 அன்று பிரான்ஸ் அதிபரின் ஆலோசகரான இம்மானுவேல் போனேவின் இந்திய வருகையின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நடைபெற்றதாகவும், அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவு மேம்பட்டதில் அஜித் தோவல் மூளையாக செயல்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இருநாட்டு பாதுகாப்பின் ஒரு அங்கமாக அமீரகத்தில் தஞ்சமடைந்த, இந்தியாவில் தேடப்பட்டு வரும் 100 கிரிமினல்களை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்துள்ளன.
Published by:Arun
First published: