முகப்பு /செய்தி /இந்தியா / பெண்களைத் தூரத்திச் சென்று நம்பர் கேட்டு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி

பெண்களைத் தூரத்திச் சென்று நம்பர் கேட்டு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெண்களை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லைக் கொடுத்த வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு பெண்களை துரத்திச் சென்று அவர்களின் செல்போன் எண்ணை கேட்டு தொல்லை கொடுத்த இருவருக்கு அம்மாநில செசன்ஸ் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மாலை 6.30 மணி அளவில்  சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் இரு பெண்களையும் பின் தொடர்ந்துள்ளனர். சிறிது தூரம் நடந்த பின்னர் இந்த பெண்களுக்கு தங்களை இருவர் பின்தொடர்வது தெரியவந்துள்ளது. சிறிது நேரம் நின்று அவர்களை பார்த்த போது இரு இளைஞர்களும் அந்த இளம் பெண்களிடம் தகாத முறையில் பேசி, இருவரின் செல்போன் எண்ணையும் தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இவர்களிடம் இருந்து தப்பிக்க இரு பெண்களும் வேகமாக நடந்த நிலையில், இரு இளைஞர்களும் விடாமல் பின் தொடர்ந்துள்ளனர். அத்துடன், செல்போன் எண்ணை தரவில்லை என்றால், அடுத்த நாளும் விடாமல் தொடர்வோம் என மிரட்டியுள்ளனர். இரு பெண்களில் ஒருவரின் தம்பி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்துள்ளார். உடனடியாக, வேகமாக நடந்த அங்கு சென்ற பெண்கள் விஷயத்தை தம்பியிடம் விவகாரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய பெண்ணின் சகோதரர்  பொதுமக்களை திரட்டி இருவரையும் கண்டித்துள்ளார். அத்துடன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நிதி ஆயோக் CEO ஆக தூய்மை இந்தியா திட்டத்தின் மூளையாக இருந்த பரமேஸ்வரன் நியமனம்

இரு பெண்களின் ஒருவர் 18 வயதுக்கு குறைவான சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. இந்நிலையில், வழக்கை விசாரித்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ புலாட்டே, இருவரும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாக தொல்லை கொடுத்து சீண்டலில் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் வதிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Minor girl, POCSO case