ஹோம் /நியூஸ் /இந்தியா /

போன் அடிச்சும் எடுக்கல.. வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் நின்ற இளம்பெண்.. குடும்பத்துடன் சேர்த்து வைத்த இளைஞர்கள்!

போன் அடிச்சும் எடுக்கல.. வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் நின்ற இளம்பெண்.. குடும்பத்துடன் சேர்த்து வைத்த இளைஞர்கள்!

உதவி செய்த இளைஞர்கள்

உதவி செய்த இளைஞர்கள்

லூலூ மால் காணச்சென்ற இளைஞர்கள் ரயிலில் இளம்பெண் அழுதுகொண்டே வருவதை கவனித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ernakulam, India

இன்றைய இளைஞர்கள் எல்லாம் மோசம். மற்றவர்கள் துன்பத்தை கவனிப்பதில்லை என்று எல்லாம் குறை கூறும் போது எர்ணாகுளத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அதை பொய்யாக்கி காட்டியுள்ளனர். பாலக்காட்டே ஹோட்டலில் வேலை செய்யும் விஷ்ணு (22), மற்றும்  சுமின் கிருஷ்ணன் (20) என்ற இளைஞர்கள் எடப்பள்ளியில் உள்ள லூலூ மால் பார்ப்பதற்காக ஒட்டப்பள்ளம் எனுமிடத்தில் இருந்து சபரி எக்ஸ்பிரஸ்  ரயில் ஏறியுள்ளனர். அதே ரயிலில் 18 வயது பெண்ணும் ஒருவர் பயணித்துள்ளார்.

நீண்ட நேரமாக அப்பெண்ணின் அலைபேசிக்கு அவரது வீட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால் அதை அவர் எடுக்காமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த நீண்ட நேரம் கவனித்து வந்த இளைஞர்கள் அவரிடம் என்னவென்று விசாரித்துள்ளனர்.

அப்போது அப்பெண் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாக கூறியுள்ளார். கொச்சின் அருகே வந்ததும் இளைஞர்கள் இருவரும்அப்பெண்ணின் தொலைபேசியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செய்தியை கூறியுள்ளனர். மகளை காணவில்லை என்று பெற்றோர் பாலக்காடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

வடக்கு ஸ்டேஷனில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இறக்கி அருகில் இருந்த களமசேரி காவல் நிலையத்திற்கு இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு வந்த பெற்றோர் அவரது மகளை அழைத்துச்சென்றனர். வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்ணை மீது மீண்டும் குடும்பத்துடன் சேர்த்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

First published:

Tags: Ernakulam S11p12