இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது பா.ஜ.க இணையதளம்!

இன்னும் கட்சியின் விவரம், ஊடக வெளியீடுகள், தகவல்கள் மற்றும் இதர விவரங்கள் ஏதுமின்றி இந்த இணையப் பக்கம் காட்சியளிக்கிறது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 1:04 PM IST
இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது பா.ஜ.க இணையதளம்!
பாஜக இணையதளம்
Web Desk | news18
Updated: March 23, 2019, 1:04 PM IST
ஹேக் செய்யப்பட்டிருந்த பா.ஜ.க இணையதளம் இரண்டு வார காலத்துக்குப் பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 5-ம் தேதி பா.ஜ.க இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. இரண்டு வாரங்களாக எதிர்கட்சிகளும் நெட்டிசன்களும் மாறி மாறி கேலி செய்து கொண்டிருந்த வேளையில் நேற்று மாலை மீட்கப்பட்ட பாஜக இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இணையதளம் தற்போது புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளது. முதன்மைப் பக்கமும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்ப் பட்டியலும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்றபடி வேறெந்த கூடுதல் பக்கங்களும் இந்த இணையப் பக்கத்தில் இணைக்கப்படவில்லை.

இன்னும் கட்சியின் விவரம், ஊடக வெளியீடுகள், தகவல்கள் மற்றும் இதர விவரங்கள் ஏதுமின்றி இந்த இணையப் பக்கம் காட்சியளிக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர், ’நீண்ட நாள்களாக முடக்கிக்கிடக்கிறீர்களே, எங்களுடைய உதவி வேண்டுமானல் நாங்கள் உதவத் தயார்’ என ட்விட்டரில் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ஜெயலலிதாவின் கைரேகை போலியா?
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...