உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பெஹ்ஜாம் பகுதியில் கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பெண்கள் பள்ளியில் பயின்று வரும் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவியரை அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் பள்ளிக்குள் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக லக்கிம்பூர் கேரி பகுதியின் மாவட்ட கல்வி அலுவலர் லக்ஷ்மி காந்த் பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த பள்ளியைச் சேர்ந்த இரு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க:
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்திய மனைவியை அடித்துக் கொன்ற கணவர் - மைசூரில் விபரீதம்
இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததை தொடர்ந்து நிர்வாகத்திற்கு அழுத்தம் தரும் விதமாக மாணவிகளை பள்ளிக்குள் வைத்து பூட்டி பிளாக் மெயில் செய்துள்ளனர். இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் பள்ளிக்கு விரைந்துள்ளனர். உடனடியாக உள்ளூர் காவல்துறை மற்றும் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். சில மணிநேரம் போராட்டத்திற்குப் பின் அவர்களிடம் இருந்து மாணவிகள் மீட்கப்பட்டனர்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியார் என்றும் இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. அதேபோல், கல்வி துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டே தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.