மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 15-20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு பழங்குடி ஆண்கள் இறந்து விட்டனர் என்று போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு நபர் காயமடைந்துள்ளார்.
இந்த வழக்கில் புகார் கொடுத்தவரும், பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், தாக்கியவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை குரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிமாரியாவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் 6 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங் ககோடியா தலைமையிலான குழு ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தைத் தொடங்கியது. சியோனி காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் போராட்ட இடத்திற்கு வந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் பிரஜேஷ் பட்டி கூறுகையில், சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பட்டி மற்றும் சிமாரியாவைச் சேர்ந்த தன்சா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது கும்பல் ஒன்று தடிகளால் தாக்கியதாகவும், தானும் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதை எதிர்த்து தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ககோடியா பஜ்ரங் தள் குண்டர்களே இதற்குக் காரணம் உடனடியாக இந்த வலதுசாரி இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கொல்லப்பட்ட இருவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கொடி நிவாரணமும், வாரிசுக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவருமான கமல் நாத், தேசிய குற்றப்பதிவேடு கழக விவரங்களின்படி பழங்குடியினருக்கு எதிரான குற்றச்செயல்களில் மத்திய பிரதேசம் நம்பர் 1 ஆகத் திகழ்கிறது என்று குற்றம்சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cow Slaughter, Madhya pradesh