Home /News /national /

ஒரே ஊசியை பயன்படுத்தி டாட்டூ.. 2 பேருக்கு எச்.ஐ.வி. பரவியது

ஒரே ஊசியை பயன்படுத்தி டாட்டூ.. 2 பேருக்கு எச்.ஐ.வி. பரவியது

கோப்புப் படம்

கோப்புப் படம்

இவர்கள் இருவரையும் சேர்த்து, பல நோயாளிகளுக்கு பச்சைக் குத்திக் கொள்வது மூலம் எச்ஐவி நோய்க் கிருமி பரவியது தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பச்சைக் குத்தும் போது, எச்ஐவி நோய்க்கிருமி உடைய ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை கிருமிநாசினி செய்யம்மால் பலருக்கும் பயன்படுத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்த 20 வயதுமிக்க ஆண் ஒருவருக்கும், 25 வயதுமிக்க பெண்  ஒருவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தனித்தனியாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறத் தொடங்கினர். நோயாளிகளுக்கு பெரிய மருத்துவ வரலாறு இல்லதாதல், முதலில் வழக்கமான  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இருப்பினும், இவர்களுக்கு பல்வேறு மருத்துவ உபாதைகள் தொடர்ந்து ஏற்பட்டதால் எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவில், இவர்கள் எச்.ஐ.வி நுண்கிருமியால் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

    இதையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர்கள் சமீபத்தில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும், உடல் உறுப்பு தான சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது.  எனவே, அவர்களுக்கு எப்படி எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்டது என குழம்பிய மருத்துவர்கள், அவர்களுடம் மீண்டும் விசாரணை நடத்தியபோதுதான் உண்மை தெரியவந்தது.

    பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் ப்ரீத்தி அகர்வால் இதுகுறித்து கூறுகையில், " இவர்கள் இருவரையும் சேர்த்து, பல நோயாளிகளுக்கு பச்சைக் குத்திக் கொள்வது மூலம் எச்ஐவி நோய்க் கிருமி பரவியது தெரிய வந்துள்ளது. மேற்படி, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய அவர், " பொதுவாக பச்சை குத்திக்கொள்ள பயன்படும் ஊசிகளை ஒருவருக்கு பயன்படுத்திய பின்னர்மற்றவர்களுக்கு பயன்படுத்த கூடாது. ஆனால், இந்த சம்பவத்தில் ஒரே ஊசியால் பலருக்கும் டாட்டூ குத்தப்பட்டுள்ளது. இதுவே எச்.ஐ.வி. பரவலுக்கு காரணம்" என்று தெரிவித்தார்.

    பொதுவாக, எச்ஐவி கிருமி அவ்வளவு எளிதாக பரவுவதில்லை. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ( centre for Disease Control and prevention ) முகமையின் கூற்றுப்படி, எச்ஐவி பாதிப்புக்கு உள்ளான ஒருவரை தொடுவதாலோ, கட்டிப் பிடித்துக் கொள்வதாலோ, முத்தமிட்டுக் கொள்வதாலோ கிருமி   பரவுவதில்லை.

    இதையும் வாசிக்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடம் தமிழக அரசு கருத்துக்கேட்பு

    நோய் வாய்ப்பட்ட ஒருவருடன் பாலுறவு கொள்ளும் போதும் , நோய் வாய்ப்பட்ட ஒருவரின் இரத்தம் சார்ந்த பொருட்கள் பரிமாறிக் கொள்ளும் போதும், நோய் வாய்ப்பட்ட ஒருவருக்கு பயன்படுத்தி ஊசிகளை பயன்பத்திக் கொள்ளும் போதும், நோய் வாய்ப்பட்ட ஒருவரின் உடல் உறுப்புகளை பொருத்தும் போதும் தான் இந்நோய் பெரிதும் பரவுவதாக அம்முகமை தெரிவிக்கிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: HIV, Tattoos

    அடுத்த செய்தி