சேட்டை செய்த மாணவர்களை கட்டி வைத்த தலைமை ஆசிரியை...!

சேட்டை செய்த மாணவர்களை கட்டி வைத்த தலைமை ஆசிரியை...!
News18
  • News18
  • Last Updated: November 29, 2019, 10:42 AM IST
  • Share this:
வகுப்பில் அதிகமாக சேட்டை செய்ததாகக் கூறி இரு மாணவர்கள் பள்ளியில் கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள காதிரி பகுதியில் இருக்கும் நகராட்சி தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள், வகுப்பில் அதிக சேட்டை செய்ததாகக் கூறி கயிற்றால் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

News18தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, இரு மாணவர்களையும் பெஞ்சில் கட்டி வைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உடனே, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், குழந்தைகள் நல ஆணையத்திற்கும் புகார் செல்ல, அங்கிருந்தும் மாவட்ட ஆட்சியருக்கு ஸ்ரீதேவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்