Home /News /national /

ஹிஜாப்புடன் தேர்வு அறைக்குள் சென்ற இரு மாணவிகள் - அனுமதி மறுத்ததால் பொதுத் தேர்வு எழுதாமலேயே வெளியேற்றம்

ஹிஜாப்புடன் தேர்வு அறைக்குள் சென்ற இரு மாணவிகள் - அனுமதி மறுத்ததால் பொதுத் தேர்வு எழுதாமலேயே வெளியேற்றம்

கர்நாடகா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்காததால் இரு மாணவிகள் தேர்வு எழுதாமல் வெளியேறிய சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள வித்யேதயா பியு கல்லூரியில் படித்து வரும் இரு மாணவிகளள் இன்று தங்களின் ஹால்டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு தேர்வு அறைக்குள் பர்தாவுடன் நுழைந்துள்ளனர். இந்த இருவரிடமும் பர்தா அணிந்து கொண்டு தேர்வு எழுத அனுமதியில்லை என தேர்வு கண்காணிப்பாளரும் கல்லூரி முதலமைச்சரும் அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    சுமார் 45 நிமிடங்கள் அந்த மாணவிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் நீதிமன்ற உத்தரவின் படி உங்களுக்கு அனுமதியில்லை என கல்லூரி தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு மாணவிகளும் தேர்வு எழுதாமலேயே வளாகத்தை விட்டு வெளியேறினர்.

    முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடிதத்து. கல்வி நிறுவனத்திற்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரத் தடை என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய தரப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், பதிலுக்கு இந்து அமைப்பு அதில் தொடர்புடைய மாணவர்கள் கல்லூரிக்குள் காவித் துண்டு அணிந்து வந்து பதில் போராட்டம் நடத்தினர்.

    இந்த இரு தரப்பும் ஒரு கட்டத்தில் மோதலில் ஈடுபடத் தொடங்கிய நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதியில்லை, கல்வி நிறுவனங்கள் வழிகாட்டும் சீருடைகள் மட்டுமே அணிய வேண்டும் என தீர்ப்பளித்தது.

    கர்நாடகா மாநிலத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. மே 18 ஆம் தேதி வரை இந்த பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 1,076 மையங்களில் சுமார் 6.84 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். உடை தொடர்பாக மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் அனைத்து மையங்களிலும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பர்தா மற்றும் ஹிஜாப் அணியும் மாணவிகள், தேர்வு அறைக்கு செல்லும் போது பர்தாவை கழட்டி சென்று பின்னர் தேர்வு முடிந்ததும் அதை அணிந்து கொள்ளலாம் என இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hijab

    அடுத்த செய்தி