13 வயது மாணவியை சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கடந்த நவம்பர் 28ஆம் தேதி வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். சக மாணவர்கள் அனைவரும் நடனப் பயிற்சிக்காக வெளியே சென்ற நிலையில் மாணவி தனியாக இருப்பதை அதே வகுப்பில் படிக்கும் நான்கு மாணவர்கள் கவனித்துள்ளனர்.
உடனடியாக, அந்த மாணவர்களில் இருவர் வகுப்பறைக்குள் சென்று கதவை மூடியுள்ளனர்.மற்ற இரு மாணவர்களை காவலுக்கு வைத்து தனியாக இருந்த மாணவியிடம் மற்ற இரு மாணவர்களும் துன்புறுத்தி கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், இதை வெளியே சொல்லக் கூடாது என அந்த மாணவியை மிரட்டியுள்ளனர். ஆனால், வீட்டிற்கு சென்றதும் மாணவிக்கு வலி ஏற்படவே இந்த சம்பவம் குறித்து வீட்டாரிடம் கூறி அழுது முறையிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்!
அதன் அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபட்ட இரு மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளி சிறையில் அடைத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.வகுப்பறையில் வைத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gang rape, Minor girl, POCSO case, Rape case, School students