மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்! கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்! கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
காங்கிரஸ், பா.ஜ.க
  • News18
  • Last Updated: October 21, 2019, 7:23 PM IST
  • Share this:
மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க கூட்டணி மிகப் பெரும் வெற்றி என்று தேசிய ஊடகங்கள் வெளியிட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கிறன.

ஏ.பி.பி - சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 204 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹரியானாவில் பா.ஜ.க கூட்டணி 72 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நௌ கருத்துக் கணிப்பில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், பா.ஜ.க 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ரிபப்ளிக் - ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.க 216-230 தொகுதி வரை வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 50-69 தொகுதி வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் பா.ஜ.க 52-63 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று, காங்கிரஸ் 15-19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா -ஆக்ஸிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி 166-194 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 72-90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்