முகப்பு /செய்தி /இந்தியா / துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்கள் கடத்தல்; கட்டாய மதமாற்றம் செய்து வயதானவர்களுக்கு திருமணம் செய்ததாக புகார்!

துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்கள் கடத்தல்; கட்டாய மதமாற்றம் செய்து வயதானவர்களுக்கு திருமணம் செய்ததாக புகார்!

சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர், டெல்லி மாநிலங்களில் சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சீக்கிய பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி, அவர்களை மிரட்டி மாற்று மதத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ஜம்மு காஷ்மீரில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருப்பது போன்று மதமாற்ற தடுப்பு சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, அவர்களை மாற்று மதத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் மஞ்சிந்தர் சிர்சா குற்றம்சாட்டி உள்ளார்.

சிர்சாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சீச்கியர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கருத்தை வலியுறுத்தி தலைநகர் டெல்லியிலும் சீக்கியர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

சீக்கிய பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மண் சிங் சாலையில் இருந்து காஷ்மீர் இல்லம் வரை பேரணியாக செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Also Read:   பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை! - கள்ளக்காதல் காரணமா?

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் மஞ்சிந்தர் சிர்சா கூறுகையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ளது போல மதமாற்ற தடுப்புச் சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் அமல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

Also Read:   வியூகங்களை தவிடுபொடியாக்கும் ‘பாகுபலி’ காட்டு யானை - 2வது நாளாக போராடும் வனத்துறையினர்!

டெல்லி சிக்கிய குருத்வாரா கமிட்டியைச் சேர்ந்த குழுவினர் காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, ஸ்ரீநகரில் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு மாற்று மதத்தினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்களை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அக்குழுவில் இடம்பெற்ற சிர்சா, செய்தியாளர்களை சந்தித்த போது, கடத்தப்பட்ட சீக்கிய பெண்கள் விரைவில் வீடு திரும்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீக்கிய பெண்கள் கடத்தல், மதமாற்ற திருமண விவகாரம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

First published:

Tags: Jammu and Kashmir, Protest, Religious conversion