ஹோம் /நியூஸ் /இந்தியா /

சசிதரூர் Vs கார்கே: காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

சசிதரூர் Vs கார்கே: காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

சசிதரூர் - கார்கே

சசிதரூர் - கார்கே

congress election | காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் களம் காணும் இரண்டு முக்கிய நபர்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19- ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர் என இருமுனைப் போட்டியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் களம் காணும் இந்த இருவரும் கட்சியில்  கடந்தவந்த பாதை மற்றும் பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம்.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரில் யார் வெற்றி பெற்றாலும், சுதந்திரத்துக்கு பின்னர் தென் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் 6வது தலைவராக இருப்பார். இதற்கு முன்னர் பி.பட்டாபி சித்தராமையா, என்.சஞ்சீவ் ரெட்டி, கே.காமராஜ், எஸ். நிஜலிங்கப்பா மற்றும் பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் தென் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலைவராக இருந்தனர்.

  இந்நிலையில், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தினரின் விசுவாசியான கார்கே, ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறி வந்தவர்.

  1972ம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கார்கே தேர்தல் அரசியலில் நுழைந்தார். மீண்டும் எட்டு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.

  கர்நாடகாவில் 1972 முதல் 2009ம் ஆண்டு வரை இருந்த அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் அமைச்சராக பதவி வகித்தார். 2009ல் முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் நுழைந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பின்னர் ரயில்வே, சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையின் அமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டார்.

  2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெறும் 44 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ல் கார்கே முதன்முறையாக தேர்தலில் தோல்வியை தழுவினார். அவரை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்தது.

  குல்பர்கா மாவட்டத்தில் உள்ள வார்வட்டியில் ஏழை குடும்பத்தில் பிறந்த கார்கே பி.ஏ., சட்டம் படித்து, சிறிது காலம் பயிற்சி செய்தார். 1969ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

  கார்கேவை எதிர்த்து களம் காணும் சசி தரூருக்கு வயது 66. திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யான சசி தரூர் தனது சக கட்சியினரால் விருந்தினர், "உலகளாவிய குடிமகன்", "கிளர்ச்சி" மற்றும் "வெளிநாட்டவர்" என அழைக்கப்படுபவர்.

  ஐநா தூதராக இருந்த சசி தரூர் பொதுச்செயலாளர் பதவியை நூழிலையில் இழந்தார். சிறந்த எழுத்தாளரான அவர் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி மீது சில நேரங்களில் விமர்சன கருத்துகளை கொண்டிருந்தாலும், காங்கிரஸால் தொடர்ந்து அணைக்கப்பட்டு வருபவர்.

  கேரள சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் காந்தி குடும்பத்தினருக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்து வந்தார்.

  2019ம் ஆண்டில் காங்கிரஸ் தனது மோசமான தோல்வியை பதிவு செய்த பின்னர் மோடியை எதிர்ப்பதற்காக அவரை எதிர்ப்பதை விட "பிரதமர் சரியானதை சொல்லும்போதோ அல்லது செய்யும்போதோ அவரைப் பாராட்ட வேண்டும்" என்று கூறினார்.

  திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும் சசி தரூர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  தென் மாநிலங்களிலிருந்து தலைவர்:

  கார்கே, தரூர் என யார் தேர்வானாலும் தென் மாநிலங்களிலிருந்து தேர்வான 6வது தலைவர் ஆவார்கள். இதற்கு முன்பு பி.பட்டாபி சித்தராமையா, என்.சஞ்சீவ் ரெட்டி, கே.காமராஜ், எஸ்.நிஜலிங்கப்பா, பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் இருந்தனர். எனவே 25 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தை சேராதவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  காங்கிரஸ் தலைவர் போட்டி: மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்... திரிபாதி மனு தள்ளுபடி

  யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

  மல்லிகார்ஜுன கார்கே குல்பர்கா மாவட்டத்தில் பிறந்து பி.ஏ., சட்டம் பயின்றார். 1969ல் காங்கிரசில் இணைந்தார். ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற விருப்பத்தை கார்கே வெளிப்படையாக கூறினார். 1972ல் முதன்முறையாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எட்டு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

  கர்நாடகாவில் 1972 - 2009ம் ஆண்டு காலகட்டத்தில் அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் அமைச்சராக இருந்தார். 2009ல் முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.

  மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை, ரயில்வே, சமூக நீதித்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்தார். 2014ல் மக்களவை தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது.

  அப்போது குல்பர்கா தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை காங்கிரஸ் தலைவரானார். 2019ல் கார்கே முதன்முறையாக தோல்வியடைந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரானார்.

  யார் இந்த சசி தரூர்?

  சசி தரூர் சக கட்சியினரால் விருந்தினர், "உலகளாவிய குடிமகன்", "கிளர்ச்சி", "வெளிநாட்டவர்" என அழைக்கப்படுபவர்.  ஐநா தூதராக இருந்தார். பொதுச்செயலாளர் பதவியை நூழிலையில் இழந்தார்.

  ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மீது சில நேரங்களில் விமர்சன கருத்துக்களை கொண்டிருந்தவர். கேரள சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் காந்தி குடும்பத்தினருக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்தார்.

  மோடியை எதிர்ப்பதைவிட சிறந்த செயல்களை பாராட்டலாம் என்று தெரிவித்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கும் சசி தரூர் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Congress