Home /News /national /

தமிழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்: கர்நாடகாவில் 2 பேர் கைது

தமிழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்: கர்நாடகாவில் 2 பேர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தவர்களில் 20 பேர் போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் 2 பேரை கைது செய்த கர்நாடக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையில் விசாரணை செய்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து
    கர்நாடகாவில் அளித்து பணியில் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில மொழிகளை தேர்வு மொழியாக தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் தவிர்த்த பிற மொழிகளை தேர்வு செய்து தமிழகத்தில் படித்தது போன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் வேலைக்கு சேர்வதற்கு தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை வழங்கியது போல் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கர்நாடகாவில் பணியில் சேர்ந்த 2 நபர்களை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலி சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் போலி சான்றிதழ் என்பதையும் உறுதி செய்து ஆவணங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

    மத்திய மாநில அரசுப் பணியில் சேரும் நபர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதற்கு அந்தந்த தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    அஞ்சல் துறையில் பணிக்கு சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டப்போது 200 க்கும் அதிகமான நபர்களின் சான்றிதழ்கள் போலி என தெரியவந்தது. அதேபோல் மத்திய அரசின் நிறுவனங்களில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து இரயில்வே, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்


    அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தவர்களில் 20 பேர் போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் 2 பேரை கைது செய்த கர்நாடக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையில் விசாரணை செய்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளனர்.

    போலி மதிப்பெண்கள் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யவும் அந்தத்துறைகளுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.

    மேலும் படிக்க: திருப்பதி கூட்டநெரிசலில் 3 பேர் காயம்: இலவச தரிசனத்துக்கு டோக்கன் வழங்கும் முறை ரத்து


    சான்றிதழில் மாநில மாெழியை முதல் மாெழியாக பதிவு செய்து அளித்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறையின் பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் போது வரும் அவர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் தெரியவில்லை உள்ளிட்ட பல்வேறு தவறுகள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் மதிப்பெண் சான்றிதழ் போலியாக அச்சிடப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Fake certificate, Karnataka

    அடுத்த செய்தி