ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் மேலும் இரண்டு கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் அந்தஸ்து !

இந்தியாவில் மேலும் இரண்டு கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் அந்தஸ்து !

ப்ளூ ஃபிளாக் கடற்கரைகள்

ப்ளூ ஃபிளாக் கடற்கரைகள்

லக்ஷத்தீவில் உள்ள கத்மத் கடற்கரையம் துண்டி கடற்கரையும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீர் விளையாட்டு ஆர்வலர்களிடையே மிகவும் பிடித்த இடங்களாக விளங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

லட்சத்தீவில் உள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை ஆகியவை ப்ளூ ஃபிளாக் கடற்கரைகளின் மிக மதிப்புமிக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால் நீலக்கொடி சான்றிதழின் கீழ் சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளின் எண்ணிக்கையை இந்தியா 12 ஆக உயர்த்தியுள்ளது.

நீலக்கொடி கடற்கரை( blue flag beach) என்பது சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும். ப்ளூ ஃபிளாக் திட்டம் கோபன்ஹேகன், டென்மார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) மூலம் நடத்தப்படுகிறது.

இது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டின் முயற்சிகளை பாராட்டும் நோக்கில் வழங்கப்படுகிறது. இலாப நோக்கமற்ற இதன் பணியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) பங்களிக்கிறது.

இந்தியாவில் வெப்ப காற்று காரணமாக மரணங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் இதுவரை 10 கடற்கரைகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாக 2 கடற்கரைக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள செய்தியை கடந்த 26 ஆம் தேதி வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் தன ட்விட் மூலம் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்து, லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவில் உள்ள கத்மத் கடற்கரையம் துண்டி கடற்கரையும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீர் விளையாட்டு ஆர்வலர்களிடையே மிகவும் பிடித்த இடங்களாக விளங்குகிறது. இது இயற்கை ஆர்வலர்களுக்கு வெள்ளை மணலால் போர்த்திய சொர்க்கம் போன்று காட்சியளிக்கும்.

இந்தியாவின் நீலக் கொடி கடற்கரைகள்

இந்தியாவின் டையூவில் உள்ள கோக்லா, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், கர்நாடகாவின் காசர்கோடு மற்றும் படுபித்ரி, கேரளாவில் கப்பாட், ஆந்திராவில் ருஷிகொண்டா, ஒடிசாவில் கோல்டன், அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள ராதாநகர், தமிழ்நாட்டில் கோவளம் மற்றும் புதுச்சேரியில் ஈடன் கடற்கரைகள் தான் தமிழகத்தின் மற்ற 10 நீலக் கொடி கடற்கரைகள் ஆகும்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Beaches, Environment, Lakshadweep S31p01