Home /News /national /

தாயிடம் தகராறு செய்த உறவினரை படுகொலை செய்த 10, 11ம் வகுப்பு சிறுமிகள்

தாயிடம் தகராறு செய்த உறவினரை படுகொலை செய்த 10, 11ம் வகுப்பு சிறுமிகள்

Murder

Murder

அக்கம்பக்கத்தினர் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முகமது குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கேரளாவில் தங்களின் தாயுடன் வம்பிழுத்த, நெருங்கிய உறவினரை இரண்டு சிறுமிகள் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் அம்பலவயல் காவல் நிலையத்துக்கு நேற்று மதியம் 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் சகோதரிகளான இரண்டு சிறுமிகள் தங்களின் தாயுடன் வம்பிழுத்த உறவினர் ஒருவரை கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர். இதனைக் கேட்டு பரபரப்படைந்த போலீசார் ஆயிரம்கொல்லி என்ற பகுதியில் இருந்த சிறுமிகளின் வீட்டுக்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்த கிணற்றில் 70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை மீட்டனர்.

    நடந்தது என்ன?

    கொல்லப்பட்டவரின் பெயர் முகமது கோயா (வயது 70). இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவர் 3வது மனைவியுடன் ஆயிரம்கொல்லி பகுதியில் வசித்து வந்த வீட்டில் தான் சிறுமிகளும், அவர்களின் தாயாரும் தனி போர்ஷனில் வசித்து வந்திருக்கின்றனர். கொல்லப்பட்ட முகமது கோயா, சிறுமிகளின் நெருங்கிய உறவினர். தந்தை இல்லாத நிலையில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த வந்த சிறுமிகளின் தாயுடன், முகமது அவ்வப்போது பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    Also read:  கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

    நீண்டகாலமாக முகமது குடைச்சல் கொடுத்து வந்த நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் சிறுமிகளின் தாயாருடன், மோதலில் ஈடுபட்டு அவரை அடிக்க முயன்றிருக்கிறார். அப்போது சிறுமிகள் இருவரும் அவரை தடுக்க முயன்றுள்ளனர். பிரச்னை பெரிதாகிய போது சகோதரிகள் இருவரும் சேர்ந்து அங்கிருந்த கோடாரியை எடுத்து முகமதுவை வெட்டியிருக்கின்றனர். பலத்த காயமடைந்த முகமது பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியிருக்கின்றனர்.

    இந்த கொலை சம்பவத்தையடுத்து சிறுமிகள் இருவரையும் கைது செய்த போலீசார். சிறுமிகளின் தாயாரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    Also read:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

    இச்சம்பவம் குறித்து அம்பலவயல் பஞ்சாயத்து தலைவர் ஹஃப்சத் குன்னக்கடன் கூறுகையில், சிறுமிகளின் குடும்பம் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்கள் தங்கியிருந்தது வீடே கிடையாது அது வெறும் கொட்டகை தான். சிறுமிகளின் தாயாருக்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை நடந்தது. அக்கம்பக்கத்தினர் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முகமது குடைச்சல் கொடுத்து வந்ததாக கூறுகின்றனர். நீண்டகாலமாக இது தொடர்ந்து கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் இப்படி நடந்திருக்கக் கூடும் என கூறினார்.
    Published by:Arun
    First published:

    Tags: Kerala, Minor girl, Wayanad

    அடுத்த செய்தி