Mumbai Fire | மும்பையில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் நிகழ்ந்த பெரும் தீ விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு: 70 நோயாளிகள் மீட்பு...

மும்பையில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் பெரும் தீ விபத்து

மும்பையில் வணிக வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • Share this:
    மும்பை மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பையில் பாந்தப் எனும் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சன்ரைஸ் எனும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் அந்த மருத்துவமனையில் நள்ளிரவில் தீடிரென தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைவதற்கும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதி முழுவதும் தீ மளமளவென பரவியது. சிகிச்சை பெற்று வந்த 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குள் சிக்கித் தவித்தனர்.

    அதன்பிறகு அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனை வளாகத்தில் சிக்கித் தவித்த 70க்கும் மேற்பட்ட நோயாளிகளை கிரேன் உதவியுடன் மீட்டு வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இரு நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 23 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் படிக்க...தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: