வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற ஆண்கள்! கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளச் சொன்ன அரசு மருத்துவர்

வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற ஆண்கள்! கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளச் சொன்ன அரசு மருத்துவர்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 14, 2019, 8:00 PM IST
  • Share this:
ஜார்கன்ட் மாநிலம் ராஞ்சியில் வயிற்று வலி என்ற மருத்துவமனைக்கு சென்ற இருவருக்கு கர்ப்ப பரிசோதனை செய்யச் சொல்லி மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவர் முகேஷ் குமார். அவரிடம், கோபால் கஞ்சு மற்றும் காமேஷ்வர் ஜன்ஹு ஆகிய இருவர் வயிற்றுவலி சிகிச்சை எடுக்கச் சென்றுள்ளனர். அவர் இருவரையும், முகேஷ் குமார் கர்ப்ப பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், எச்.ஐ.வி மற்றும் ஹீமோகுளோபின் சோதனையும் மேற்கொள்ளச் சொல்லியுள்ளார். கர்ப்ப பரிசோதனை செய்யச் சொன்னதால் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இருவரும் மாவட்ட மருத்துவ அதிகாரி அருண் குமார் பஸ்வானிடம் புகார் அளித்தனர்.


இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அருண் குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மருத்துவர் முகேஷ் குமார் மறுத்துள்ளார்.

Also see:

First published: October 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...