Home /News /national /

இண்டிகோ பொறியாளர்களை தாக்கிய மின்னல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

இண்டிகோ பொறியாளர்களை தாக்கிய மின்னல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

மாதிரி படம்

மாதிரி படம்

சம்பவம் நடந்தபோது மாலை 5 மணியளவில் விமானத்தின் கேப்டனிடம் அவர்கள் தங்கள் வாக்கி-டாக்கி மூலம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagpur, India
நாக்பூர் விமான நிலையத்தில் பணியில் இருந்த இரண்டு இண்டிகோ பொறியாளர்களை மின்னல் தாக்கியதில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். மகாராஷ்டிராவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது இண்டிகோ அகமதாபாத் - நாக்பூர் விமானத்திற்கான வழக்கமான பணிகளை இந்த பொறியாளர்கள் வாக்கி-டாக்கியின் மூலம் செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், மின்னலின் தாக்கத்தால் பொறியாளர்களில் ஒருவர் சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார், மற்றொருவருக்கு அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என கூறினார். சம்பவம் நடந்தபோது மாலை 5 மணியளவில் விமானத்தின் கேப்டனிடம் அவர்கள் தங்கள் வாக்கி-டாக்கி மூலம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மின்னலால் தாக்கப்பட்ட பொறியாளர்கள் உடனடியாக கிங்ஸ்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தது. இதற்கிடையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Published by:Archana R
First published:

Tags: India, Indigo

அடுத்த செய்தி