அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படங்கள் வைரல் - இரு படங்களில் உள்ள வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாவரங்கள் மற்றும் மரங்கள் மீது அன்பு கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவரின் ஆர்வம் நிறைந்த செயல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும்.

அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படங்கள் வைரல் - இரு படங்களில் உள்ள வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
அரவிந்த் கெஜ்ரிவால்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 5:25 PM IST
  • Share this:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாவரங்கள் மற்றும் மரங்கள் மீது அன்பு கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவரின் ஆர்வம் நிறைந்த செயல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும். இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக ஜூன் மாதம் அவர் கடைசியாக ஒரு சில மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து கடந்த திங்களன்று, அவர் மீண்டும் ஒரு வீட்டிற்குள் வளர்க்கும் செடியை கவனித்துக்கொண்ட ஒரு படத்தில் காணப்பட்டார்.

இந்த படம் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்தது. மேலும் தாவரங்கள் மீதான ஆர்வம் காரணத்திற்காக இந்த படம் வைரலாகி வருகிறது.

இரண்டு படங்களையும் பகிர்ந்து கிருஷ்ணா என்பவர் "நிலையானது" என்று தலைப்பில் எழுதினார். பின்னர் இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இந்த படத்தில் நிலைப்படுத்த என்ன இருக்கிறது என பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதனால் இந்த படமானது வைரலாகிவிட்டது.


படத்தில் புத்திசாலித்தனமான தந்திரமாக மூங்கில் இருந்தது. ஒரு சில பார்வையாளர்களால் இதை கண்டுபிடிக்க முடிந்தது. இந்த புகைப்படங்கள் இடுகையிடப்பட்ட சில மணி நேரங்களுக்குள் 5,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. பலர் இரண்டு படங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்க தவறிய போதிலும் இந்த புகைப்படங்கள் வைரலானது.ஏராளமானோர் தங்களது நேரத்தை ஒதுக்கி இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து சரிபார்த்தனர். அதில் ஒரு புகைப்படத்தில் செடி இருக்கும் கப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தண்ணீர் ஊற்றுவது போலவும், மற்றொரு புகைப்படத்தில் அந்த கப் இருக்கும் சாஸரில் தண்ணீர் ஊற்றுவது போலவும் உள்ளது.

இதனை பலரும் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களால் ஷேர் செய்து வருகின்றனர்.ஆனால் சாஸர்களை ஈரமாக வைத்திருப்பதன் மூலம் தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது சில தாவரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கான சிறந்த முறையான என வீட்டு தோட்டக்கலையில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியும்.

பானைகளின் கீழ் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றுவது தாவரங்களுக்கு  மேலிருந்து கீழாக தண்ணீர் பாய்ச்சும் முறையாகும்.

 
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading