டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் மதுபோதையில் நுழைய முயன்ற பெண் மற்றும் அவரது காதலனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள ராஜவீதியில் குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ளது. குடியரசுத்தலைவரின் குடியிருப்பில் ஒரு பெரிய தர்பார் மண்டபம், அசோகர் மண்டபம், வரவேற்புக்கூடம், உணவுக்கூடம், விருந்து மண்டபம், டென்னிஸ் மைதானம், போலோ மைதானம், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்டவை உள்ளன. தீவிர பாதுகாப்பு வளைத்திற்குள் குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30மணியளவில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இருவர் நுழைய முயன்றுள்ளனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் இருவரையும் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இருவரும் மது அருந்தி இருந்ததும் தெரியவந்தது.
மதுபோதையில் இருந்த இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இருவரும் சலூனில் வேலை பார்ப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் இருவர் மதுபோதையில் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரங்கள்: முதல் 10 இடங்களில் 3 இந்திய நகரங்கள்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.