Home /News /national /

ஒரு இளைஞருக்காக +2 மாணவிகள் இருவர் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை - தனுஷ் பட பாணியில் சம்பவம்..

ஒரு இளைஞருக்காக +2 மாணவிகள் இருவர் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை - தனுஷ் பட பாணியில் சம்பவம்..

Minor Girls fight

Minor Girls fight

தனுஷ் நடிப்பில் வெளியான ’திருடா திருடி’ படத்தில் இதே போன்று நாயகனுக்காக இரண்டு ஹீரோயின்கள் சாலையில் சண்டையிடுவது போன்ற காட்சி இடம்பிடித்திருந்தது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு இளைஞனுக்காக, இரண்டு மாணவிகள் சாலையில் அடித்துக் கொண்ட சம்பவத்தால் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாப்பள்ளியில் ஒரு இளைஞனுக்காக இரண்டு மாணவிகள் சாலையில் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 2 மாணவிகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நடுரோட்டில் எவ்விதமான சங்கடமும் இல்லாமல் சண்டை போட்டு கொண்ட இரண்டு மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளில் பிளஸ்டூ படித்து வருவதும், இரண்டு பேரும் மற்றொருவருக்கு தெரியாமல் ஒரே இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது.



    இந்த நிலையில் அவர்களில் ஒரு மாணவி அந்த இளைஞனுடன் சென்று கொண்டிருப்பதை பார்த்த மற்றொரு மாணவி அந்த மாணவி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தலை முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டது தெரியவந்தது.

    Also read:  படுத்துக்கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் டிஜிபிக்கு நீதிபதி எச்சரிக்கை

    இரண்டு பேருக்கும் அறிவுரைகள் வழங்கி பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் மாணவிகளை ஒப்படைத்த போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்துகின்றனர்.

    ஒரு பெண்ணிற்காக இரண்டு ஆண்கள் சண்டை போட்டு கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. ஆனால் ஒரு ஆணுக்காக இரண்டு மாணவிகள் தெருவில் இறங்கி முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு கொண்ட இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    தனுஷ் நடிப்பில் வெளியான ’திருடா திருடி’ படத்தில் இதே போன்று நாயகனுக்காக இரண்டு ஹீரோயின்கள் சாலையில் சண்டையிடுவது போன்ற காட்சி இடம்பிடித்திருந்தது. தற்போது அந்த சினிமா காட்சி நிஜ வாழ்க்கையிலும் உண்மையாக அரங்கேறியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Dhanush, Dhanush Movie, Love

    அடுத்த செய்தி