10 வருடத்துக்கு முன்பு இறந்தவருக்கு கோவிட் தடுப்பூசி போட்டதாக வந்த மெசேஜ் - விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்

கொரோனா தடுப்பூசி

உயிரிழந்த நபரின் பெயர் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின்  பட்டியலில் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பத்தில் பொதுமக்கள் தயக்கம் காட்டினாலும் தற்போது கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளை ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர்.

  இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குடும்பத்தினருக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் தேசாய். கடந்த ஞாயிற்றுகிழமை இவரது மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் இவரது தந்தை நட்வர்லால் தேசாய் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்துள்ளது. இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நட்வர்லால் தேசாய் 2011-ம் ஆண்டு தனது 93 வயதில் மரணமடைந்துள்ளார். இறந்து 10 வருடம் ஆன நபர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்த மேசேஜை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.

  இதுகுறித்து பேசியுள்ள தகோத் மாவட்ட ஆட்சியர், “ இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். நரேஷ் தேசாய் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது பான் கார்ட் என்னும் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த அவரது தாத்தாவுடைய பான் எண்ணும் ஒன்றாக இருந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையினரிடம் தகவல் கேட்டுள்ளோம்” என்றார்.
  பேத்தியே தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் உயிரிழந்த நபரின் பெயர் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின்  பட்டியலில் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

  அதேமாவட்டத்தை சேர்ந்த ஷர்மா என்பவருடைய மொபைல் போனுக்கு அவரது தாயார் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஷர்மாவின் தாயார் மது ஷர்மா மாரடைப்பு காரணமாக ஏப்ரல் மாதம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகன், எனது தாயார் மார்ச் இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் ஏப்ரல் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் இரண்டாவது டோஸ் எல்லாம் எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால் எனது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. நாள் இங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் விசாரித்தேன் அவர்கள் தடுப்பூசி யாருக்கும் செலுத்தவில்லை என்று பதிலளித்தனர்” என்றார். ஷர்மாவுக்கு இவ்வாறான மெஜேச் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கிறோம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: