ஹரியானா உள்துறை அமைச்சரின் சகோதரருடன் தகராறு: டிஐஜி சஸ்பெண்ட்!

ஹரியானா உள்துறை அமைச்சரின் சகோதரருடன் தகராறு: டிஐஜி சஸ்பெண்ட்!

டிஐஜி சஸ்பெண்ட்

கபில் விஜ்-ன் புகாரின் அடிப்படையில், டிஐஜி அசோக் குமார் மீது தாக்கியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
ஹரியானா மாநில உள்துறை அமைச்சரின் சகோதரருடன் தகராறில் ஈடுபட்ட அம்மாநில டிஐஜி-யை சஸ்பெண்ட் செய்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருப்பவர் அனில் விஜ், இவரின் சகோதரர் கபில் விஜ், இவர் தனது நண்பருடைய பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அம்பாலா கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சிர்ஹிந்த் கிளப்புக்கு கடந்த ஞாயிறு (பிப் 7) மதியம் சென்றுள்ளார். இதே விழாவில் ஹரியானா காவல்துறையில் லஞ்ச ஒழிப்பு டிஐஜி-யாக பணியாற்றும் அசோக் குமாரும் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட அசோக் குமாருக்கும், கபில் விஜ்ஜிற்கும் இடையே ஏதோ காரணத்திற்காக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிஐஜி அசோக் குமார், கபில் விஜ்ஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த மற்றவர்கள் இருவரையும் விலக்கி பிரச்னையை முடித்து வைத்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கண்டோன்மெண்ட் சர்தார் காவல்நிலையத்தில் உயர் அதிகாரி அசோக் குமார் மீது
கபில் விஜ் புகார் அளித்துள்ளார். அதில் உணவு அருந்தும் நேரத்தில் தனக்கும் அசோக் குமாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது, எந்தவித காரணமும் இன்றி என்னையும், என் குடும்பத்தினரையும் அசோக் குமார் கடுமையாக திட்டினார். என்னை மிரட்டியதுடன், தான் காவல்துறை உயர் அதிகாரி என்பதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கபில் விஜ்-ன் புகாரின் அடிப்படையில், டிஐஜி அசோக் குமார் மீது தாக்கியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டிஐஜி அசோக் குமார் இடைக்கால ஜாமீன் கோரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 2 நாட்களுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி சந்தீப் சிங் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதால் டிஐஜி அசோக் குமாரை துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் காலத்தில் அசோக் குமார் குர்கானின் போண்டிசியில் உள்ள வட்டார பயிற்சி அலுவலகத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: