முகப்பு /செய்தி /இந்தியா / தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் தடுக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் தடுக்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழக மீனவர்கள் மேல் இலங்கை கடற்படை தாக்குதலைத் தடுக்க இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இரு நாட்டு அமைச்சர்கள் ஏப்ரலில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோதம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்புக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் இருநாட்டு அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு எட்டப்படும் என்றார்.

Also Read : ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை... சக மாணவர் அதிரடி கைது... நடந்தது என்ன?

மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Fishermen, L Murugan, Srilanka Army