• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ’பல் வளரவில்லை'..... பிரதமர், முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்!

’பல் வளரவில்லை'..... பிரதமர், முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்!

பிரதமர், முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்

பிரதமர், முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்

அன்புள்ள ஹிமந்தா அன்கிள், தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எழுதியுள்ளார்.

  • Share this:
பல் வளரவில்லை என்பதால், அதற்கு உரிய நவடிக்கை எடுக்க வலியுறுத்தி அசாமை சேர்ந்த இரு சிறுவர்கள் பிரதமருக்கும், அம்மாநில முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

ரிஸ்வான் மற்றும் ஆர்யான் என்ற இரண்டு சிறுவர்களும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ரிஸ்வானுக்கு 6 வயதும், ஆர்யானுக்கு 5 வயதும் ஆகிறது. சகோதரர்களான இருவருக்கும் முன்பக்கமாக மேல் அண்ணத்தில் இருக்கும் முன்பக்க இரு பற்கள் முளைக்கவில்லை. இதனால், ருசியான உணவுகளை சாப்பிடுவதில் இருவருக்கும் சிரமம் இருந்துள்ளது. இதனால், பற்கள் முளைக்க என்ன செய்ய வேண்டும்? என யோசித்த அவர்களுக்கு, வித்தியாசமான யோசனை பிறந்துள்ளது.

அதாவது, தங்களின் பற்கள் வளருவதற்கு பிரதமர் மோடியும், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமானந்தா பாஸ்வாவும் உதவ வேண்டும் எனக்கோரி அவர்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அண்ணன் ரிஸ்வான் அசாம் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், " அன்புள்ள ஹிமந்தா அன்கிள் (uncle) ... எனக்கு ஐந்து பற்கள் வளரவில்லை. இதனால், எனக்கு பிடித்த உணவுகளை உண்பதில் சிரமங்களை எதிர்கொள்கிறேன். பிடித்த உணவை மெல்லும்போது சிரமப்படுகிறேன்.



அன்புள்ள ஹிமந்தா அன்கிள், தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எழுதியுள்ளார். தம்பி ஆர்யான், அண்ணனைவிட ஒருபடி மேலே சென்று பிரதமர் மோடிக்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அன்புள்ள மோடிஜி, எனக்கு மூன்று பற்கள் வளரவில்லை. இந்த பற்கள் வளராததால் பிடித்த உணவுகளை மெல்ல முடியவில்லை. இதனால், அன்புள்ள மோடி ஜி, தயவு செய்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.



சிறுவர்களின் இந்த கடிதங்களை, அவர்களின் மாமா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் இந்த கடிதங்களை பதிவு செய்ததும் நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றது. பலரும், சிறுவர்களின் கடிதத்தை படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். ஒரு ஒரு நெட்டிசன், பிரதமர் இப்போது தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாடு பயணத்தை மேற்கொண்டுள்ளார், அந்த பயணங்களை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பும்போது, சிறுவர்களின் இந்த முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற சிறப்பு கவனத்தை செலுத்துவார் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.



மற்றொருவர், நாட்டில் இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத பிரதமாரா, சிறுவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப் போகிறார் என நக்கலாக கேட்டுள்ளார். இன்னொருவர், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, தயவு செய்து இந்த சிறுவர்களின் கோரிக்கையையாவது நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: