Home /News /national /

கங்கை நதியில் ஹுக்காவுடன் மாமிச விருந்து.. வைரலான வீடியோ..இருவர் கைது

கங்கை நதியில் ஹுக்காவுடன் மாமிச விருந்து.. வைரலான வீடியோ..இருவர் கைது

கங்கை நதியில் மாமிச உணவு பார்டி நடத்திய இருவர் கைது

கங்கை நதியில் மாமிச உணவு பார்டி நடத்திய இருவர் கைது

புனித தலத்தில் இந்நபர்கள் வேண்டுமென்ற மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் காவல்துறை இவர்களை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் உள்ள கங்கை நதியில் மாமிச உணவு சாப்பிட்டு, ஹுக்கா புகைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி கங்கை நதியில் உள்ள படகில் அமர்ந்து  மாமிச  விருந்துடன் மற்றும் ஹுக்காவை புகைத்துள்ளனர். இந்த காணொளி சமூக  வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரயாக்ராஜ்  காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹசான் அகமது மற்றும் முகமது ஆசிப் என்ற இருவரை கைது செய்துள்ளது.

    இது தொடர்பாக காவல் அதிகாரி ஆஸ்தா ஜெய்ஸ்வால் கூறுகையில், புனித தலத்தில் இந்நபர்கள் வேண்டுமென்ற மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். மீதமுள்ள ஆறு பேரையும் விரைவில் கைது செய்வோம் எனத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள கங்கை நதியில் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக மாமிசம், ஹுக்கா புகை பிடித்ததாக எட்டு பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருவரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.


    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் கங்கை யமுனை நதி சங்கமிக்கும் இடமாகும். மேலும், தொன்மையான நம்பிக்கை படி சரஸ்வதி என்ற நதியும் அங்கு பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்பட்டு, அங்கு மூன்று நதிகளின் சங்கமமான 'திரிவேணி சங்கமம்' என்று அறியப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆளும்கட்சி பெண் எம்எல்ஏவை கன்னத்தில் அறைந்த கணவர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

    இந்து மத நம்பிக்கையின்படி திரிவேணி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் மிக புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் அங்கு மத பூசலை உருவாக்கக் கூடாது என காவல்துறை உஷார் நிலையில் உள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ganga, Party, Prayagraj, Uttar pradesh

    அடுத்த செய்தி