• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தீ அணைப்பான்களை ஆக்சிஜன் சிலிண்டர் என கொரோனா நோயாளிகளுக்கு விற்ற 2 பேர் கைது!

தீ அணைப்பான்களை ஆக்சிஜன் சிலிண்டர் என கொரோனா நோயாளிகளுக்கு விற்ற 2 பேர் கைது!

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைப்பான்களை விற்று மோசடி

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைப்பான்களை விற்று மோசடி

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைப்பான்களை இரண்டு நபர்கள் தன்னிடம் விற்று ஏமாற்றியதாக கீதா அரோரா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.

  • Share this:
    டெல்லியில் தீ அணைப்பான்களை ஆக்சிஜன் சிலிண்டர் என கொரோனா நோயாளிகளுக்கு விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக டெல்லி துவாரகா துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அசுதோஷ் செளகான் (19), ஆயுஷ் குமார் (22) உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஐந்து தீ அணைப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைப்பான்களை இரண்டு நபர்கள் தன்னிடம் விற்று ஏமாற்றியதாக கீதா அரோரா என்ற பெண் புகார் அளித்திருந்தார். அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவதிப்பட்டு வந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்க அந்த பெண் முயற்சித்துள்ளார். எனினும், மருத்துமனையில் படுக்கை கிடைக்கவில்லை.

    இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்ய நினைத்த அந்த பெண், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களை தொடர்பு கொண்டு இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என கோரியுள்ளார். இதையடுத்து, அந்த நபர்கள் ரூ.10,000 பணத்தை பெற்றுக்கொண்டு, தீ அணைப்பான்களை கொடுத்துச்சென்றுள்ளனர்.

    சற்று தாமதாகவே தான் வாங்கியது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை, தீ அணைப்பான் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா உதவியுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் போலீசாரிடம் நடந்த விசாரணையில், தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு நெருக்கடி சூழ்நிலையை பயன்படுத்தி, மக்களிடம் தீ அணைப்பான்களை ஆக்சிஜன் சிலிண்டர் என மோசடி செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: