முகப்பு /செய்தி /இந்தியா / குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்.. வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்.. வைரலாகும் வீடியோ.. உண்மை என்ன?

கிராப் செய்யப்பட்ட இந்த வீடியோ தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் அதை flag செய்துள்ளது.

கிராப் செய்யப்பட்ட இந்த வீடியோ தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் அதை flag செய்துள்ளது.

கிராப் செய்யப்பட்ட இந்த வீடியோ தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் அதை flag செய்துள்ளது.

  • Last Updated :

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பொறுப்பேற்கிறார். குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி அவமதித்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோக்களை எதிர்க்கட்சி பிரமுகர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. சம்பந்தப்பட்ட காணொலியில் குடியரசுத் தலைவர் நடந்து வந்து பிரதமர் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவருக்கும் வணக்கம் வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: முதல் குடிமகனாக நாட்டு மக்களுக்கு கூற விரும்புவது இது தான் - குடியரசுத் தலைவர் தனது கடைசி உரையில் கோரிக்கை

சில வினாடிகள் ஓடும் அந்த காணொலியில் பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் அவருக்கு பதில் வணக்கம் செலுத்தாமல் கேமராவை பார்ப்பது போன்ற அர்த்தத்தில் உள்ளது.

இந்த காணொலியை ஆம் ஆத்மி கட்சி, தெலங்கானா ராஷ்டிரிய சமதி போன்ற எதிர்க்கட்சி பிரமுகர்கள் பகிர்ந்து குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தாமல் அவமதித்துவிட்டார் என கருத்து கூறி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கிராப் செய்யப்பட்ட இந்த வீடியோ தவறான அர்த்தத்தில் பகிரப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் அதை flag செய்துள்ளது.

மேலும், இந்த நிகழ்வின் முழு காணொலியும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் நடந்து வந்து வணக்கம் செலுத்தியபோது முன்னரே பிரதமர் மோடி அவருக்கு பதில் வணக்கம் செலுத்தி விடுகிறார். வைரலான வீடியோவின் முந்தைய சில நிமிடங்களில் இது வரும் நிலையில், அந்த பகுதியை வெட்டி பிற்பகுதி மட்டும் பரப்பப்பட்டு வந்துள்ளது.

top videos

    மேலும், குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பதில் வணக்கம் செலுத்தும் புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டர் பக்கமும் வெளியிட்டுள்ளது.

    First published:

    Tags: PM Modi, President, Ramnath Kovinth, Video gets viral, Viral Video