முகப்பு /செய்தி /இந்தியா / பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து பெயரில் போலி கணக்கு: ப்ளூ டிக் வழங்கிய ட்விட்டர்

பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து பெயரில் போலி கணக்கு: ப்ளூ டிக் வழங்கிய ட்விட்டர்

ஹர்னாஸ் சந்து

ஹர்னாஸ் சந்து

ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu) மிஸ் யுனிவர்ஸ் (Miss universe)பட்டத்தை வென்றதும் அவரது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் ஒரு போலி கணக்கிற்கு உறுதிப்பட்ட கணக்கிற்கான ப்ளூ டிக்கை ட்விட்டர் (Twitter) நிறுவனம் வழங்கியது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu) பெயரில் ட்விட்டரில் பல்வேறு போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. பிரபலங்களும் போலி கணக்கை டேக் செய்து ட்விட் செய்த நிலையில், போலி கணக்கு ஒன்றுக்கு உறுதிப்படுத்தப்பட கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்ரேலின் எய்லட் நகரில் உள்ள  யுனிவர்ஸ் டோமில் 2021ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில்,80 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.  அவருக்கு 2020ம் ஆண்டு மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா (Andrea Meza ) மகுடத்தை சூடினார்.

இதற்கு முன்பு சுஸ்மிதா சென், லாரா தத்தா ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியரான ஹர்னாஸ் சந்து இப்பட்டத்தை வென்றதால் ஒரே நாளில் அவர் புகழின் உச்சத்துக்கு சென்றார். அரசியல், சினிமா உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஹர்னாஸ் சந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது  சுஸ்மிதா சென், சசிதரூர் போன்ற பிரபலங்கள் ஹர்னாஸ் சந்தின் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்கை டேக் செய்து வாழ்த்தியுள்ளனர்.

ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதும் அவரது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் ஒரு போலி கணக்கிற்கு உறுதிப்பட்ட கணக்கிற்கான (Verified account) ப்ளூ டிக்கை ட்விட்டர் (Twitter) நிறுவனம் வழங்கியது. இதனை டேக் செய்து பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு நிதியுதவிக்காக சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்

பின்னர், ஹர்னாஸ் சந்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது உண்மையான ட்விட்டர் கணக்கு “@HarnaazKaur” மற்றும் கணக்கின் பெயர் ஹர்னாஸ் கவுர் சந்து என்று விளக்கம் அளித்தார். அவர் தனது ட்விட்டர் கணக்கிற்கான இணைப்பையும் அதில்  கொடுத்தார்.

மேலும் படிங்க: மகாகவி பாரதிக்கு 482 கிலோவில் சாக்லெட் சிலை!

First published:

Tags: Miss Universe, Twitter