காஷ்மீர், லடாக் தனித் தனி நாடுகளா? சர்ச்சை வரைபடத்தையடுத்து ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு !

மனிஷ் மகேஸ்வரி

  • Share this:
ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை தனித் தனி நாடுகளாக காட்டியது தொடர்பான விவகாரத்தில் ட்விட்டரின் இந்திய நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்துக்கு இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது போன்றவையால் ட்விட்டர் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையில் ட்விட்டர் நிறுவனம் சிக்கியது. இதில், ஜம்மு- காஷ்மீர் தனி நாடாகவும் லடாக் தனி நாடாகவும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீர், லடாக் பகுதிகளால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்கனவே தகராறு இருந்து வரும் நிலையில்  ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடு மத்திய அரசு வட்டாரத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில்,  இந்தியாவின் வரைபடத்தை தவறாக காட்டியதாக ட்விட்டரின் இந்திய நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜெட் வேகத்தில் உயரும் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய பெட்ரோலிய அமைச்சர் மீது வழக்கு!


உத்தரப் பிரதேச மாநிலம் புலண்ட்ஷஹ்ர் பகுதியைச் சேர்ந்த பஜ்ரங் தளம் கட்சி உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் பேரில்  இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம்   பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: