நிர்மலா சீதாராமன் Vs ராகுல்காந்தி - ரஃபேல் விவகாரத்தில் முற்றும் மோதல்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய்களை பரப்புவது வெட்ககேடு என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் Vs ராகுல்காந்தி - ரஃபேல் விவகாரத்தில் முற்றும் மோதல்
ராகுல்-நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: January 7, 2019, 10:26 AM IST
  • Share this:
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கிய ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால், நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்கு, மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்புவது வெட்கக் கேடு என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் இடையே காரசார விவாதம் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஒரு லட்சம் கோடி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தனியார் நாளிதழில் நிர்மலா பதிலளித்திருந்தார். இவை முழுவதும் பொய் என தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, ரஃபேல் விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேசி, ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை கூறி வருவதாக சாடியுள்ளார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், நாளிதழில் வெளியான கட்டுரையை முழுமையாக படிக்காமலேயே, மக்களை ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாக விமர்சித்துள்ளார்.

2014 முதல் 2018-ம் ஆண்டு வரை 26,570 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாகவும், 73,000  கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை அறியாமல், நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.இப்படி, இருவருக்குமான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஃபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி ஆகியோர் உரிய விளக்கம் அளித்ததாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் இருவரும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தி இருப்பதாகவும், பல ஆண்டுகளுக்கு பின் அரசின் இத்தகையை தெளிவான பதிலை நாடாளுமன்றம் கண்டிருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

Also see... உங்கள் ராசிக்கு இன்றைய பலன் என்ன? | 07-01-2019
First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading