• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Twitter Vs மத்திய அரசு: ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையே சீண்டிய ட்விட்டர்!

Twitter Vs மத்திய அரசு: ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையே சீண்டிய ட்விட்டர்!

ரவிசங்கர் பிரசாத்

ரவிசங்கர் பிரசாத்

ரவிசங்கர் பிரசாத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தனக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற குழுவுக்கு விளக்கம் தரக்கோரி டிவிட்டர் நிறுவனத்திடம் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  • Share this:
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவருடைய ட்விட்டர் கணக்கு, சுமார் ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியாத வகையில் முடக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார். இதன் மூலம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட ட்விட்டர் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான மோதல் மீண்டும் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தவறான செய்திகளும், இந்திய இறையாண்மைக்கு எதிரான தகவல்களும் பரப்பப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது மத்திய அரசு. புதிய விதிகளின் படி இத்தளங்களில் எழும் புகார்களை விசாரிக்க இந்திய அளவில் ஒரு குறைதீர் அதிகாரியை நியமித்தல், அலுவலகம் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் விவரங்களை மத்திய அரசுடம் பகிரவேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விதிகளை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவர்கள், பாஜக தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் சிலவற்றில் நீல நிற டிக்கை நீக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளை டிவிட்டர் கையாண்டு மத்திய அரசின் அதிருப்திக்கும் ஆளானது.

Also Read:   2வது மனைவியை இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்: கிறிஸ்துவ நபரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனையடுத்து மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உடன்படாவிட்டால் அதிரடியான சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என மத்திய அரசு எச்சரித்து, அதன் பின்னர் மத்திய அரசின் விதிகளை ட்விட்டர் ஏற்று அதனை செயல்படுத்தியதால் இரு தரப்புக்குமான மோதல் சற்று தணிந்தது.

இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தை சீண்டி புதிய சர்ச்சைக்கும் மோதலுக்கும் டிவிட்டர் வித்திட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு இன்று ஒரு மணி நேரம் முடக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்ததால், அவர் காப்புரிமை விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக கூறி ட்விட்டர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Also Read:  ஆக்ஸிஜன் தேவையை 4 மடங்கு அதிகமாக காட்டிய டெல்லி அரசு! - 12 மாநில பாதிப்புக்கு காரணம் - உச்சநீதிமன்ற குழு

“நண்பர்களே இன்று மிகவும் விசித்திரமான ஒன்று நடந்தது. அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் காரணத்தினால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எனது கணக்கை அணுக ட்விட்டர் மறுத்தது, பின்னர் அவர்கள் என்னை கணக்கை அணுக அனுமதித்தனர்” என்று ட்விட்டரில் முடக்கப்பட்ட போது எடுத்த ஸ்கிரீன் ஷாட்களை இணைத்து பதிவிட்டுள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

ட்விட்டரின் நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 4 (8) ஐ மீறியுள்ளன, அங்கு எனது சொந்த கணக்கிற்கு என்னை அணுக மறுக்கும் முன் எந்த முன் அறிவிப்பையும் வழங்கத் தவறிவிட்டன,"

 “மேலும், கடந்த பல ஆண்டுகளில், எந்தவொரு தொலைக்காட்சி சேனலும் அல்லது எந்தவொரு தொகுப்பாளரும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட எனது நேர்காணல்களின் இந்த செய்தி கிளிப்புகள் தொடர்பாக பதிப்புரிமை மீறல்கள் குறித்து எந்த புகாரும் செய்யவில்லை” என தொடர் டிவீட்களை வெளியிட்டு தனது எதிர்ப்பை அவர் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவிசங்கர் பிரசாத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தனக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற குழுவுக்கு விளக்கம் தரக்கோரி டிவிட்டர் நிறுவனத்திடம் கோரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: