மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கி மற்றும் பிங்கி பட்கோங்கர் இரட்டைச் சகோதரிகள். குழந்தை பருவத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்த இவர்கள் திருமணம் ஆனால் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து வெவ்வேறு இடத்திற்கு வேண்டி வருமே. இந்த பிரிவு வேண்டாம் என்று நினைத்த இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளின் விசித்திரமான கோரிக்கைக்கு அவர்களது குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு நன்றாக பரிச்சயமான மலுங்கில் வசிக்கும் அதுல் உத்தம் ஆடடேவிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அவரும் சம்மதிக்கவே கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
View this post on Instagram
அதன்படி, வெள்ளி மதியம் மதியம் 12.30 மணியளவில் முதல் திருமணத்தில் 36 வயதான ரிங்கி பட்கோங்கரை மணந்துள்ளார். பின்னர் ரிங்கியின் சகோதரி பிங்கி பட்கோங்கரையும் கலண்டே ஹோட்டலில் நடைபெற்ற அதே திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் மூவரும் நிற்கும் படியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. திருமண வீடியோவும் இணையத்தில் ஹிட்டடித்தது.
ஒருபுறம் சோஷியல் மீடியா வைரல் என்றாலு மற்றொரு புறம் சர்ச்சையும் கிளம்பியது. ஒரு மனைவி இருக்கும் போது மற்றொரு மனைவியை மணக்க கூடாது என்று சட்டம் சொல்வதாகவும் இப்படி ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா, இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் அள்ளி வீசத் தொடங்கினர்.
ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு முதல் வெற்றி.. பணிந்தது ஈரான் அரசு!
அதோடு உள்ளூர் வாசியான ராகுல் பாரத் என்ற நபர் இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் புகாரின் அடிப்படையில், மணமகன் அதுல் உத்தம் அவுடாடே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai