ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் நர்வால் பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. முதல் குண்டுவெடிப்பானது காலை 11 மணி அளவில் நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த 5 பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் அருகே உள்ள பகுதியில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிக்கு என்ஐஏ அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து வருகின்றனர். கார் மூலமாக இந்த இரு குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வழக்கத்தை விடவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்த தற்போது இறுதியாக ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது.
#WATCH | J&K: Six people injured in two blasts that occurred in Narwal area of Jammu. Visuals from the spot. Police personnel are present at the spot. pic.twitter.com/eTZ1exaICG
— ANI (@ANI) January 21, 2023
ஜனவரி 30 தேதி ஸ்ரீநகரில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் முன்னிலையில் தனது யாத்திரையை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். ராகுல் யாத்திரை மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்பு மற்றும் உளவு படையினர் ஜம்மு காஷ்மீரில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb blast, Jammu and Kashmir, Rahul gandhi